இலங்கை தேசிய ஆணைக்குழுவானது இரு கூறுகளை உள்ளடக்க்கியுள்ளது: அவை ஆணைக்குழு மற்றும் செயலகம் என்பனவாகும்.
தற்போது இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமராகக் கடமையாற்றும் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் இலங்கையில் உள்ள மிகப் பிரசித்தமான கல்வியலாளரும் அரசியல்வாதியும் ஆவார். அவருக்கு சமூகவியல் மற்றும் சமூக மானிடவியல் என்பவற்றில் கல்விப் பின்னணியொன்று உள்ளது. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக பல வருடங்கள் கடமையாற்றிய போது கல்வி, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தினார்.
அவர் டெல்லிப் பல்கலைக்கழகத்திலிருந்து சமூகவியலில் பட்டத்தையும், அவுஸ்ரேலியாவின் மெக்குவாரே பல்கலைக்கழகத்திலிருந்து முதுமாணிப் பட்டத்தையும் எடின்பேர்க் பல்கலைக்கழகத்திலிருந்து சமூக மானிடவியலில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். அவரது சேவை கல்வி, சமூக அபிவிருத்தி மற்றும் அடிப்படை அரசியல் என விரிவடைவதோடு, இளைஞர்களை வலுவூட்டல், பால்நிலை சமத்துவம் மற்றும் கல்வி சீர்திருத்தம் போன்றவற்றுக்காக முனைப்பாக ஈடுபடுகின்றார்.
திரு. நாலக கலுவெவ அவர்கள் இலங்கையில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளராவார். அவர் இலங்கை நிர்வாக சேவையில் 2000 ஆம் ஆண்டு இணைந்ததோடு, பொது நிர்வாகத்தில் இரு தசாப்தங்களுக்கும் அதிகமான அனுபங்களைக் கொண்டுள்ளார். அவரது சேவையின் போது, பாதுகாப்பு அமைச்சின் உதவிச் செயலாளர், சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு மற்றும் தேசிய லொத்தர் சபையின் பொது முகாமையாளர், ரக்னா லங்கா பிரைவட் லிமிடட்டின் தலைவர், சனாதிபதியின் மேலதிக செயலாளர், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், மேலதிக தேர்தல் ஆணையாளர் மற்றும் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார்.
அவர் பேராதனைப்; பல்கலைக்கழகத்திலிருந்து விஞ்ஞானமாணிப் பட்டத்தையும் கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து வணிக நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டத்தையும் கன்பரா பல்கலைக்கழகத்திலிருந்து முதுநிலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். தற்போது அவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் கலாநிதிப் பட்டக் கற்கைநெறியைத் தொடர்கின்றார்.
திரு. பிரபாத் ஜயசிங்ஹ அவர்கள் இலங்கை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் நிதிப் பீடத்தில் வணிகப் பொருளியலில் ஒரு சிரேஷ்ட பேராசிரியராவார். அத்துடன், அவர் தற்போது இடைக்காலப் பணியிட மாற்று நியமனமாக யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் செயலாளர் நாயகமாகக் கடமையாற்றுகின்றார்.
அவர் கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து கலைமாணி மற்றும் முதுநிலைப் பட்டங்களைப் பெற்றிருப்பதோடு, சிட்னிப் பல்கலைக்கழகதிலிருந்து தத்துவமாணிப் பட்டத்தையும் சிங்கபூர் தேசிய பல்கலைக்கழகதிலிருந்து கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். சுமார் முப்பது வருட கால கல்விசார் அனுபவத்தைக்கொண்ட அவர் வணிகப் பொருளியல் துறைக்கு முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
அவரது கல்விசார் சேவைக்கு மேலதிகமாக, அவர் ஒரு பாராட்டப்பட்ட மற்றும் விருது பெற்ற படைப்பாற்றல்மிக்க எழுத்தாளர் ஆவார். அவரது புனைகதைக்காக சிறப்புமிக்க அரச இலக்கிய விருது உட்பட ஆறு தேசிய இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

திரு. நாலக்க ரத்நாயக்க அவர்கள் யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் பிரதிச் செயலாளர் நாயகம் ஆவார். 2009 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்துகொண்ட அவர் தற்போது வகுப்பு I ஐச் சேர்ந்த உத்தியோகத்தராவார். அவரது முந்தைய நியமனங்கள் கொழும்பு பிரதேச செயலாளர் மற்றும் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவில் ஒரு தசாப்தத்திற்கு மேற்பட்ட சேவையை உள்ளடக்குகின்றன. பகிரங்க சேவைக்கு வருவதற்கு முன்னர் தனியார் துறையில் ஐந்து வருட அனுபவங்களைப் பெற்றிருந்ததோடு, சந்தைப்படுத்தல் பட்டய நிறுவனத்திலிருந்து (ஐக்கிய இராச்சியம்) தொழில்சார் தகைமைகளைக் கொண்டுள்ளார். அவர் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து உயிரியலில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்திலிருந்து அபிவிருத்திக் கற்கையில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
கல்வி
கலாசாரம் மற்றும் சமூக விஞ்ஞானம்
இயற்கை விஞ்ஞானம்
தொடர்பாடல் மற்றும் தகவல்
கணக்குகள்
நிர்வாகம்
சேவை உதவி