2005 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் பெயரிடப்பட்ட பூந்தல உயிர்க்கோளக் காப்பகம் (BBR), இலங்கையின் ஒரேயொரு கடலோர உயிர்ப்பல்வகைமை காப்பகமாகும், இது மொத்தம் 18,242 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளதுடன் இதில் 15,887 ஹெக்டேர் நிலப்பரப்பு நிலமும் 2,355 ஹெக்டேர் கடல் பகுதியும் உள்ளடங்கும். அண்ணளவாக 6.2⁰ அகலாங்கு மற்றும் 81.21⁰நெட்டாங்கில் அமைந்துள்ள இந்த காப்பகம் அண்ணளவாக 27,455 மக்களைக் கொண்டுள்ளதுடன் மனிதனால் மாற்றியமைக்கப்பட்ட நிலப்பரப்புகள் முதல் ரம்சார் தளமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஈரநிலங்கள் உட்பட அதிக உயிர்ப்பல்வகைமை முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் வரையிலான சுற்றுச்சூழல் அமைப்புகளின் தனித்துவமான உருவப்படத்தைப் பிரதிபலிக்கிறது. காப்பகத்தின் மைய வலயத்தை உருவாக்கும் பூந்தல தேசிய பூங்கா, ஈரநில உயிர்ப்பல்வகைமை பெருக்கத்தால் நிறைந்த நான்கு உவர்நீர் களப்புகளைக் கொண்டுள்ளதுடன், அண்ணளவாக 230 வகையான குடியிருப்பு மற்றும் இடம்பெயர்வு பறவைகளுக்கும், இரு வகையான முதலைகளுக்கும் ஆதரவளிக்கிறது. கடற்கரைகள் மற்றும் மணல் திட்டுகள், புதர்க்காடுகள், உலர் கலப்பு பசுமைமாறா காடுகள் மற்றும் முள் காடுகள், உப்பு சதுப்புநிலங்கள், களப்புகள், நன்னீர் நிலைகள், நெல் வயல்கள், வீட்டுத் தோட்டங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் பருவகால ஈரநிலங்கள் ஆகியவை இந்த காப்பகத்தினுள் உள்ள வாழ்விட பல்வகைமையில் அடங்கும். இது உள்ளூர் மற்றும் சர்வதேச பார்வையாளர்கள், குறிப்பாக பறவைப் பார்வையாளர்கள் மற்றும் வனவிலங்குப் பார்வையாளர்களுக்கு ஒரு முக்கிய ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.