SLNCU

இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள்

யுனெஸ்கோவின் இயற்கை உலக மரபுரிமைத் தளமான இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள், சிகர வனப்பகுதி, ஹார்டன் சமவெளிகள் மற்றும் நக்கிள்ஸ் பாதுகாப்பு வனப்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியது, இது விதிவிலக்கான சுற்றுச்சூழல், இயற்கை அழகு மற்றும் கலாசார மதிப்புள்ள ஒரு பகுதியை உருவாக்குகிறது. இந்த மலை நிலப்பரப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் செறிவிற்கு ஆதரவளிக்கிறது மற்றும் உயிரியல் பரிணாம் வளர்ச்சியின் முக்கிய கட்டங்களைப் பிரதிபலிக்கிறது. அதன் காடுகள், புல்வெளிகள் மற்றும் நீர்நிலைகள் என்பன உயிர்ப்பல்வகைமைப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலை என்பவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தப் பகுதி ஆழமான ஆன்மீக முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. குறிப்பாக, பல நம்பிக்கைகளால் போற்றப்படும் சிவனொளிபாத மலை (Adam’s Peak), இயற்கைக்கும் நம்பிக்கை முறைமைகளுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை நிரூபிக்கிறது. இயற்கை மரபுரிமை மற்றும் மனித நல்வாழ்வை நிலைநிறுத்தும் அழியக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இந்த மத்திய மலைப்பகுதிகள் எடுத்துக்காட்டுகின்றன.