காலி பழைய நகரமும் அதன் கோட்டைகளும்
ஐரோப்பாவிற்கும் தெற்காசியாவிற்கும் இடையிலான பல நூற்றாண்டுத் தொடர்புகளை பிரதிபலிக்கும் ஒரு வலுவான காலனித்துவ நகரத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக காலி பழைய நகரமும் அதன் கோட்டைகளும் உள்ளன. முதலில் 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களால் கட்டப்பட்டு பின்னர் டச்சுக்காரர்களால் விரிவுபடுத்தப்பட்ட காலி கோட்டை, ஐரோப்பிய இராணுவ கட்டிடக்கலை வெப்பமண்டல நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுவதை விளக்குகிறது. இலங்கையின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்தக் கோட்டை, காலனித்துவ மற்றும் உள்ளூர் பாரம்பரியத்தின் அடுக்குகளைப் பாதுகாக்கும் அதன் தெருக்கள், கோபுரங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், குடிமை கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளுடன் ஒரு வாழும் வரலாற்று நகரமாக உள்ளது. இந்தத் தளம் ஐரோப்பிய கட்டிடக்கலை வடிவங்கள் மற்றும் தெற்காசிய மரபுகளின் தனித்துவமான கலவையை பிரதிபலிக்கிறது, இது உலகளாவிய கடல்சார் வர்த்தகம் மற்றும் கலாசார பரிமாற்றம் என்பவற்றில் இலங்கையின் வரலாற்றுரீதியான வகிபாகத்தினை எடுத்துக்காட்டுகிறது.