SLNCU

அனுராதபுர புனித நகரம்

அனுராதபுர புனித நகரம் உலகின் மிக முக்கியமான பண்டைய நகரங்களில் ஒன்றாகும் என்பதுடன் இலங்கையின் முதலாவது தலைநகரமாகவும் உள்ளது. கி.மு 4 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இது, 1300 ஆண்டுகளுக்கு மேலாக தேரவாத பௌத்தத்தின் முக்கிய மையமாக செயற்பட்டு, தீவின் மத, அரசியல் மற்றும் கலாசார அடையாளத்தை ஆழமாக வடிவமைத்து, உலகில் பதிவுசெய்யப்பட்ட வரலாற்றைக் கொண்ட மிகப் பழமையான உயிருள்ள மரமான புனித ஜய ஶ்ரீ மகா போதியின் தாயகமான அனுராதபுர நகரம், பௌத்த பக்தி மற்றும் துறவற வாழ்க்கையின் கருத்து மையமாக உள்ளது. இந்த நகரம் அதன் நினைவுச்சின்ன தூபிகள், துறவி மடங்கள், அரண்மனைகள் மற்றும் அதிநவீன நீர்ப்பாசன அமைப்புகள் என்பவற்றிற்காக புகழ்பெற்றது. அவை கட்டடக்கலை, பொறியியல் மற்றும் நகர்ப்புறத் திட்டமிடல் என்பவற்றில் குறிப்பிடத்தக்களவு சாதனைகளை பிரதிபலிக்கின்றன. இந்த நீடித்த எச்சங்கள் புராதன இலங்கை நாகரிகத்தின் ஆன்மீக பக்தி, நிர்வாகப் பண்பு மற்றும் அரசுக்கலை என்பவற்றை எடுத்துரைப்பதோடு, அ​வை அனுராதபுரத்தை அதன் தலைசிறந்த உலகளாவிய மதிப்பு மற்றும் கலாசார மரபுரிமைப் பேறு என்பவற்றுக்கு ஒரு வாழும் உறுதிச்  சான்றை உருவாக்குகின்றன.