SLNCU

யுனெஸ்கோ தலைமைகள் நிகழ்ச்சித்திட்டம்

யுனெஸ்கோவின் UNITWIN  (பல்கலைக்கழக இணைப்பு மற்றும் வலையமைப்பு) முன்னெடுப்பின் கீழ் 1992 இல் தாபிக்கப்பட்ட யுனெஸ்கோ தலைமைகள் நிகழ்ச்சித்திட்டம், யுனெஸ்கோவின் பணிப்பாணை தொடர்பான முன்னுரிமைப் பகுதிகளில் ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் அறிவுப் பகிர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. யுனெஸ்கோ தலைமை உயர்கல்வி அல்லது ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றினால் நடத்தப்படுகிறது மற்றும் தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் கல்வி ஒத்துழைப்பை உருவாகக்குவதற்கான மையப் புள்ளியாகவும்  செயற்படுகிறது.

யுனெஸ்கோ தலைமைகள் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தை இணைக்கும் வலையமைப்புகள் மூலம் செயற்படுகின்றன. அவை துறைகளுக்கு இடையேயான அணுகுமுறைகளை ஊக்குவிக்கின்றன, வடக்கு-தெற்கு மற்றும் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை வளர்க்கின்றன, மேலும், கல்வி அறிவை நடைமுறைத் தீர்வுகளுக்கு பரிமாற்றுவதன் மூலம் சான்றுகள் அடிப்படையிலான கொள்கை அபிவிருத்திக்கு பங்களிக்கின்றன. 

நிறுவன ஆற்றலை வலுப்படுத்துதல், சர்வதேச தெரிவுநிலையை மேம்படுத்துதல், புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி சிறப்பு என்பவற்றிற்கு ஆதரவளித்தல் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுடன் (SDGs) இணைந்த தேசிய மற்றும் உலகளாவிய வளர்ச்சி முன்னுரிமைகளுக்கு நேரடியாக பங்களிப்பது உள்ளிட்ட பல நன்மைகளை இந்த நிகழ்ச்சித்திட்டம் வழங்குகிறது. 

இலங்கை, மதன்ஜீத் சிங் தெற்காசிய நீர் முகாமைத்துவ நிறுவகத்தில் யுனெஸ்கோ தலைமை ஒன்றை நடத்துகிறது, இது  தெற்காசியாவில் நிலைபேறான அபிவிருத்தி, காலநிலை மீட்டெழுச்சி மற்றும் நீர் பாதுகாப்பு என்பவை தொடர்புபட்ட முக்கியமான சவால்களைக் கையாண்டு, நீர் முகாமைத்துவத் துறையில் ஆராய்ச்சி, ஆற்றலைக் கட்டியெழுப்புதல் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு என்பவற்றிற்கு பங்களிப்புச்செய்கிறது.