யுனெஸ்கோ பசுமையாக்கல் கல்வி பங்குடைமை(GEP) என்பது காலநிலை நெருக்கடிக்கு பதிலளிக்கும் மற்றும் நிலைபேறான அபிவிருத்தியை ஊக்குவிக்கும் கல்வி முறைமைகளை வலுப்படுத்துவதில் நாடுகளுக்கு ஆதரவளிப்பதற்காக 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் மாற்றமடைந்து வரும் கல்வி உச்சி மாநாட்டில் தொடங்கப்பட்ட ஓர் உலகளாவிய முன்னெடுப்பாகும். அனைத்து கற்பவர்களும் காலநிலை மாற்றத்தைக் கையாள்வதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், நிலைபேறான சமூகங்களுக்கு பங்களிப்பதற்கும் தேவையான அறிவு, திறன்கள், மதிப்புகள் மற்றும் மனப்பாங்குகள் என்பவற்றைப் பெறுவதை உறுதிசெய்வதற்காக, அரசாங்கங்கள், கல்வி நிறுவனங்கள், சிவில் சமூகம், இளைஞர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் யுனெஸ்கோ பசுமையாக்கல் கல்வி பங்குடைமை(GEP) செயற்படுகின்றது.
பிள்ளைப் பருவம் முதல் வாழ்நாள் முழுவதும் கற்றல் வரை கல்வி முழுவதும் காலநிலை நடவடிக்கை மற்றும் நிலைபேறான தன்மை என்பவற்றை உட் பொதிப்பதன் மூலம் “கற்பவர் ஒவ்வொருவரையும் காலநிலைக்கு தயார்படுத்துவதை” பசுமையாக்கல் கல்விப் பங்குடைமை(GEP) நோக்கமாகக் கொண்டுள்ளது. கொள்கை, கற்பித்தல் மற்றும் கற்றலில் காலநிலை மற்றும் நிலைபேறான தன்மையை ஒருங்கிணைப்பதன் மூலம், ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்கு 4 (அனைவருக்கும் தரமான கல்வி) உள்ளிட்ட உலகளாவிய கல்வி மற்றும் காலநிலை இலக்குகளுக்கு இது பங்களிக்கின்றது.
இப்பங்குடைமையின் பணியானது, மாற்றமடையும் கல்வியின் நான்கு முக்கிய தூண்களால் வழிநடத்தப்படுகின்றது: