யுனெஸ்கோவின் வாழ்க்கைக்கான ஆரோக்கிய நிகழ்ச்சித்திட்டம்
யுனெஸ்கோவின் வாழ்க்கைக்கான ஆரோக்கிய நிகழ்ச்சித்திட்டமானது விளையாட்டு மற்றும் உடல் செயற்பாடுகளை அவற்றின் உள்ளார்ந்த மதிப்புக்காக மட்டுமல்லாமல், பரந்த சமூக மற்றும் கல்வி நோக்கங்களை முன்னேற்றுவதற்கான சக்திவாய்ந்த கருவிகளாகவும் ஊக்குவிக்கிறது. இந்த நிகழ்ச்சித்திட்டமானது உள்ளடக்கம், பாலின சமத்துவம், ஆரோக்கியம், வாழ்க்கைத் திறன்கள் மற்றும் சமூக ஒற்றுமை என்பவற்றை வளர்ப்பதற்கான ஒரு வழிமுறையாக விளையாட்டைப் பயன்படுத்துகிறது.
கல்வி முறைமைகள் மற்றும் சமூக அமைப்புகளில் பாதுகாப்பான, அனைத்தும் உள்ளடக்கிய மற்றும் தரமான உடல் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் கொள்கைகள், ஆற்றலைக் கட்டியெழுப்புதல் மற்றும் பங்குடைமைகள் என்பவற்றுக்கு வாழ்க்கைக்கான ஆரோக்கிய நிகழ்ச்சித் திட்டம் ஆதரவளிக்கிறது. இது குழந்தைகள் மற்றும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களைச் சென்றடைவது தொடர்பாக குறிப்பாக வலியுறுத்துகிறது.
அபிவிருத்திச் சவால்களை கையாள்வதற்கு விளையாட்டை அணிதிரட்டுவதன் மூலம், யுனெஸ்கோவின் பணிப்பாணை மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கு ஏற்ப, நல்வாழ்வு, வலுவூட்டல் மற்றும் மீட்டெழுச்சி உள்ளிட்ட நிலைபேறான அபிவிருத்தி விளைவுகளுக்கு இந்த நிகழ்ச்சித்திட்டம் பங்களிப்புச்செய்கிறது.