யுனெஸ்கோ பற்றி
கல்வி, அறிவியல், கலாசாரம், தொடர்பாடல் மற்றும் தகவல் ஆகியவற்றில் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் மூலம் அமைதி மற்றும் பாதுகாப்பிற்குப் பங்களிப்புச் செய்யும் பணிப்பாணையுடன், 1945 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு விசேட நிறுவனமாக ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (UNESCO) உள்ளது.
அனைவருக்கும் தரமான கல்வியை மேம்படுத்துவதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அறிவு சார்ந்த சமுதாயங்களை உருவாக்குதல், அறிவியல் ஒத்துழைப்பை வளர்த்தல், கலாசார மற்றும் இயற்கை மரபுரிமைகளைப் பாதுகாத்தல், கலாசார பல்வகைமையை ஊக்குவித்தல், கருத்துச் சுதந்திரம் மற்றும் தகவல்களை அணுகுவதை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் யுனெஸ்கோ செயற்படுகிறது. மக்களிடையே அறிவுசார் மற்றும் தார்மீக ஒற்றுமையின் அடிப்படையில் நீடித்த அமைதி நிறுவப்பட வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கை மூலம் அதன் பணி வழிநடத்தப்படுகிறது.
194 உறுப்பு நாடுகள் மற்றும் தேசிய ஆணைக்குழுக்கள், கள உத்தியோகத்தர்கள் மற்றும் சிறப்பு நிறுவகங்களின் உலகளாவிய வலையமைப்பைக் கொண்ட யுனெஸ்கோ, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கு ஏற்ப உலகளாவிய மற்றும் தேசிய முன்னுரிமைகளை கையாளும் கொள்கைகளை உருவாக்குதல், சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரநியமங்களை அமைத்தல் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்துதல் என்பவற்றில் நாடுகளுக்கு ஆதரவளிக்கிறது.