யுனெஸ்கோவின் முழுமையான தத்துவ ஆராய்ச்சிக்குப் பங்களிப்புச் செய்கின்ற வகையில் கல்வி, அறிவியல், கலாசாரம், தொடர்பாடல் மற்றும் சுற்றாடல்சார்ந்த விடயங்கள் என்பவற்றின் ஊடாக சமாதானத்தையும் நிலைபேறான அபிவிருத்தியையும் அடையப்பெறுவதற்கானதொரு தேசிய ஒருங்கிணைக்கும் நிலையமாகச் செயற்படுதல்.
“ஐக்கிய நாடுகளின் கூட்டு உடன்படிக்கையின் மூலம் தேசியம், பால், மொழி அல்லது மதம் என்பவற்றின் ஏதேனும் வேறுபாடு இன்றி உலகின் மனித இனத்திற்காக உறுதிப்படுத்தப்பட்ட நீதி, சட்டம், நிர்வாகம், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றிற்கான உலகளாவிய மதிப்பு / கௌரவம் என்பவற்றை மேலும் விருத்திசெய்வதற்காக கல்வி, அறிவியல், கலாசாரம், தொடர்பாடல் மற்றும் சுற்றாடல் விடயங்கள் என்பவற்றின் ஊடாக இலங்கையிலுள்ள தேசிய இனங்களுக்கிடையில் பரஸ்பர ஒத்துழைப்பை விருத்திசெய்தல்”.
2024 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் சட்டத்தின் கீழ் 1949 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டு, அமைத்துருவாக்கப்பட்ட யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைகுழுவானது, இலங்கையில் யுனெஸ்கோவின் பணிப்பாணையினை ஒருங்கிணைப்பதற்கும் நிறுவுவதற்கும் பொறுப்பாகவுள்ள உத்தியோகபூர்வ அரசாங்க அமைப்பாகும்.
ஆணைகுழுவானது, இலங்கைக்கும் பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்திற்கும், புது டெல்லியில் உள்ள யுனெஸ்கோ பிராந்திய அலுவலகத்திற்கும் இடையே முதன்மை இணைப்பாளராகச் செயற்படுவதோடு, யுனெஸ்கோவின் தேர்ச்சித் துறைகளான கல்வி, இயற்கை விஞ்ஞானம், சமூக மற்றும் மனித அறிவியல், கலாசாரம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் ஆகியவற்றில் ஒத்துழைப்பு மற்றும் நிகழ்ச்சித்திட்ட செயற்படுத்தல் என்பவற்றிற்கு ஆதரவளிக்கிறது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சிற்குள் அமைந்துள்ள யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவானது, கல்வி என்னும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் தலைமையிலான ஒரு நியதிச்சட்ட ஆணைக்குழு மூலம் முக்கிய தேசிய நலனுரித்தாளர்களை ஒன்றிணைக்கின்றது. கல்வி என்னும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் துணைத் தலைவராக சேவையாற்றும் அதேவேளையில் செயலாளர் நாயகம் ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தராக பணியாற்றுகின்றார்.
அதன் ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனை வகிபாகத்தின் ஊடாக யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவானது யுனெஸ்கோவின் பெறுமதிகளை மேம்படுத்துவதற்கு பணியாற்றுவதோடு, சர்வதேச உறுதிமொழிகளுக்கு ஏற்ப இலங்கையின் தேசிய வளர்ச்சி முன்னுரிமைகளுக்கு பங்களிப்பும் செய்கிறது.