SLNCU

எமது குழு

இலங்கை தேசிய ஆணைக்குழுவானது இரு கூறுகளை உள்ளடக்க்கியுள்ளது: அவை ஆணைக்குழு மற்றும் செயலகம் என்பனவாகும்.

தலைவர்

கௌரவ. கலாநிதி ஹரினி அமரசூரிய
பிரதமர்
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர்

தற்போது இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமராகக் கடமையாற்றும் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் இலங்கையில் உள்ள மிகப் பிரசித்தமான கல்வியலாளரும் அரசியல்வாதியும் ஆவார். அவருக்கு சமூகவியல் மற்றும் சமூக மானிடவியல் என்பவற்றில் கல்விப் பின்னணியொன்று உள்ளது. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக பல வருடங்கள் கடமையாற்றிய போது கல்வி, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தினார்.

அவர் டெல்லிப் பல்கலைக்கழகத்திலிருந்து சமூகவியலில் பட்டத்தையும், அவுஸ்ரேலியாவின் மெக்குவாரே பல்கலைக்கழகத்திலிருந்து முதுமாணிப் பட்டத்தையும் எடின்பேர்க் பல்கலைக்கழகத்திலிருந்து சமூக மானிடவியலில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். அவரது சேவை கல்வி, சமூக அபிவிருத்தி மற்றும் அடிப்படை அரசியல் என விரிவடைவதோடு, இளைஞர்களை வலுவூட்டல், பால்நிலை சமத்துவம் மற்றும் கல்வி சீர்திருத்தம் போன்றவற்றுக்காக முனைப்பாக ஈடுபடுகின்றார்.

பிரதித் தலைவர்

திரு. நாலக கலுவெவ
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர்

திரு. நாலக கலுவெவ அவர்கள் இலங்கையில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளராவார். அவர் இலங்கை நிர்வாக சேவையில் 2000 ஆம் ஆண்டு இணைந்ததோடு, பொது நிர்வாகத்தில் இரு தசாப்தங்களுக்கும் அதிகமான அனுபங்களைக் கொண்டுள்ளார். அவரது சேவையின் போது, பாதுகாப்பு அமைச்சின் உதவிச் செயலாளர், சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு மற்றும் தேசிய லொத்தர் சபையின் பொது முகாமையாளர், ரக்னா லங்கா பிரைவட் லிமிடட்டின் தலைவர், சனாதிபதியின் மேலதிக செயலாளர், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், மேலதிக தேர்தல் ஆணையாளர் மற்றும் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார்.

அவர் பேராதனைப்; பல்கலைக்கழகத்திலிருந்து விஞ்ஞானமாணிப் பட்டத்தையும் கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து வணிக நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டத்தையும் கன்பரா பல்கலைக்கழகத்திலிருந்து முதுநிலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். தற்போது அவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் கலாநிதிப் பட்டக் கற்கைநெறியைத் தொடர்கின்றார்.

பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர்

சிரேஷ்ட பேராசிரியர் பிரபாத் ஜயசிங்ஹ
செயலாளர் நாயகம் - யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழு
prabhath.slncu@gmail.com

திரு. பிரபாத் ஜயசிங்ஹ அவர்கள் இலங்கை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும்  நிதிப் பீடத்தில் வணிகப் பொருளியலில் ஒரு சிரேஷ்ட பேராசிரியராவார். அத்துடன், அவர் தற்போது இடைக்காலப் பணியிட மாற்று நியமனமாக யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் செயலாளர் நாயகமாகக் கடமையாற்றுகின்றார்.


அவர் கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து கலைமாணி மற்றும் முதுநிலைப் பட்டங்களைப் பெற்றிருப்பதோடு, சிட்னிப் பல்கலைக்கழகதிலிருந்து தத்துவமாணிப் பட்டத்தையும் சிங்கபூர் தேசிய பல்கலைக்கழகதிலிருந்து கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். சுமார் முப்பது வருட கால கல்விசார் அனுபவத்தைக்கொண்ட அவர் வணிகப் பொருளியல் துறைக்கு முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளார்.  

அவரது கல்விசார் சேவைக்கு மேலதிகமாக, அவர் ஒரு பாராட்டப்பட்ட மற்றும் விருது பெற்ற படைப்பாற்றல்மிக்க எழுத்தாளர் ஆவார். அவரது புனைகதைக்காக சிறப்புமிக்க அரச இலக்கிய விருது உட்பட ஆறு தேசிய இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்

  • திரு. வை.எல் மொஹமட் நவவி செயலாளர் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சு
  • திருவதி. சஷிகலா பிரேமவர்தன மேலதிக செயலாளர்( இருதரப்புக் கொள்கைகள்) வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
  • திருவதி. சமந்தி சேனாநாயக்க மேலதிக செயலாளர் (தொழிற் பயிற்சிக் கல்வி) திறன் விருத்தி மற்றும் தொழிற் பயிற்சிக் கல்வி கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு
  • திருவதி. அப்ஸரா கல்தேரா மேலதிக செயலாளர் (அபிவிருத்தி)- உயர் கல்வி
  • திரு. ஆர்.ஏ.டீ.எஸ் ரணதுங்க மேலதிக செயலாளர் (கடற் தொழில் வளங்கள் முகாமைத்துவம்) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு
  • திருமதி. டபிள்யு. ஜீ. குமாரகம மேலதிக செயலாளர் (சுற்றாடல் கருத்திட்டம் மற்றும் கல்விப் பயிற்சி) சுற்றாடல் அமைச்சு
  • திருமதி. சுஜீவா பல்லியகுருகே மேலதிக செயலாளர் (நிருவாகம்) புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு
  • திருமதி. தீபா லியனகே மேலதிக செயலாளர் (வெகுசன ஊடகம்) சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு
  • திருமதி. எச்.ஏ.எச். பெரேரா மேலதிக செயலாளர் (சமூகப் பாதுகாப்பு) கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு
  • திரு. டபிள்யு. டபிள்யு. டபிள்யு.எம் பி.எஸ்.சி பலமகும்புர வனப் பாதுகாப்பாளர் நாயகம் வனப் பாதுகாப்புத் திணைக்களம்
  • திரு. எம்.எஸ்.எல்.ஆர்.பி மாரசிங்க பணிப்பாளர் நாயகம் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
  • கலாநிதி. நிலான் குரே பணிப்பாளர் நாயகம் மத்திய கலாசார நிதியம்
  • திருமதி. சனூஜா கஸ்தூரிஆரச்சி பணிப்பாளர் நாயகம் தேசிய அருங்காட்சியகத் திணைக்களம்
  • திருமதி. ஹேமந்தா புபுதுசிறி பணிப்பாளர் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு

தலைவரால் நியமிக்கப்பட்டவர்கள்

  • திரு. வருண ஶ்ரீ தனபால

    செயலாளர்(ப.க) டிஜிட்டல் பொருளாதார அலுவல்கள் அமைச்சு
  • திரு. எஸ். எஸ்.பி த அல்விஸ்

    பணிப்பாளர் நாயகம் இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவரகம்இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு
  • டாக்டர். ஆஷா த வொஸ்

  • திரு. சந்திர விக்கிரமசிங்க

  • கலாநிதி. விவிமேரி வண்டர்பூதன் மெதவத்தேகெதர

  • திரு. சாமிநாதன் விமல்

செயலாளர் நாயகம்

கலாநிதி. பிரபாத் ஜயசிங்க
prabhath.slncu@gmail.com

திரு. பிரபாத் ஜயசிங்ஹ அவர்கள் இலங்கை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும்  நிதிப் பீடத்தில் வணிகப் பொருளியலில் ஒரு சிரேஷ்ட பேராசிரியராவார். அத்துடன், அவர் தற்போது இடைக்காலப் பணியிட மாற்று நியமனமாக யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் செயலாளர் நாயகமாகக் கடமையாற்றுகின்றார்.

அவர் கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து கலைமாணி மற்றும் முதுநிலைப் பட்டங்களைப் பெற்றிருப்பதோடு, சிட்னிப் பல்கலைக்கழகதிலிருந்து தத்துவமாணிப் பட்டத்தையும் சிங்கபூர் தேசிய பல்கலைக்கழகதிலிருந்து கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். சுமார் முப்பது வருட கால கல்விசார் அனுபவத்தைக்கொண்ட அவர் வணிகப் பொருளியல் துறைக்கு முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளார்.  

அவரது கல்விசார் சேவைக்கு மேலதிகமாக, அவர் ஒரு பாராட்டப்பட்ட மற்றும் விருது பெற்ற படைப்பாற்றல்மிக்க எழுத்தாளர் ஆவார். அவரது புனைகதைக்காக சிறப்புமிக்க அரச இலக்கிய விருது உட்பட ஆறு தேசிய இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

பிரதிச் செயலாளர் நாயகம்

திரு. நாலக்க ரத்நாயக்க
nrathnayake.slncu@slt.lk

திரு. நாலக்க ரத்நாயக்க அவர்கள் யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் பிரதிச் செயலாளர் நாயகம் ஆவார். 2009 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்துகொண்ட அவர் தற்போது வகுப்பு I ஐச் சேர்ந்த உத்தியோகத்தராவார். அவரது முந்தைய நியமனங்கள் கொழும்பு பிரதேச செயலாளர் மற்றும் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவில் ஒரு தசாப்தத்திற்கு மேற்பட்ட  சேவையை உள்ளடக்குகின்றன.  பகிரங்க சேவைக்கு வருவதற்கு முன்னர் தனியார் துறையில் ஐந்து வருட அனுபவங்களைப் பெற்றிருந்ததோடு, சந்தைப்படுத்தல் பட்டய நிறுவனத்திலிருந்து (ஐக்கிய இராச்சியம்) தொழில்சார் தகைமைகளைக் கொண்டுள்ளார். அவர் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து உயிரியலில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்திலிருந்து அபிவிருத்திக் கற்கையில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

விடய உத்தியோகத்தர்கள்

கல்வி

திருவதி. கயனி கிரியெல்ல
கலைமாணிப் பட்டம்(களனிப் பல்கலைக்கழகம்)
கல்விமாணிப் பட்டம்(லின்கன் பல்கலைக்கழகம்)
முதுமாணிப் பட்டம்(படிப்பு)
gkirialla.slncu@gmail.com

கலாசாரம் மற்றும் சமூக விஞ்ஞானம்

திருவதி. தேவிகா அமரசேக்கர
பொருளியலில் முதுமாணிப் பட்டம்- களனிப் பல்கலைக்கழகம்
வணிக முகாமைத்துவத்தில் விஞ்ஞானமாணிப் பட்டம் – ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
damarasekara.slncu@gmail.com

இயற்கை விஞ்ஞானம்

திருவதி. உபேக்கா கினிகே
விஞ்ஞானமாணிப் பட்டம்(இயற்கை விஞ்ஞானம் – இலங்கை திறந்த பல்கலைக்கழகம்,
பட்டப்பின் டிப்ளோமா(காலநிலை மாற்றம் மற்றும் சூழல் முகாமைத்துவம்)
guhansini.slncu@gmail.com

தொடர்பாடல் மற்றும் தகவல்

திருவதி. பிரசாந்தி கொட்டேபொல
வடிவமைப்பில் இளமாணிப் பட்டம்(சிறப்பு) (ஊடகம் மற்றும் தொடர்பாடல்)
வடிவமைப்பு – மொரட்டுவப் பல்கலைக்கழகம்) கணினி பயன்பாட்டில் உயர் தேசிய டிப்ளோமா( Edexcel uk)
pkottepola.slncu@gmail.com

கணக்குகள்

திருவதி. மெத்மா லியனகே
முதுமாணிப் பட்டம்(சமூகவியல்) – களனிப் பல்கலைக்கழகம்
இளமாணிப் பட்டம்(சிறப்பு) – ருஹுனுப் பல்கலைக்கழகம்
mliyanage.slncu@slt.lk
திருவதி. நிசன்சலா பண்டார
முதுமாணிப் பட்டம்(சமூகவியல்) – களனிப் பல்கலைக்கழகம்
வணிக முகாமைத்துவத்தில் விஞ்ஞானமாணிப் பட்டம் – ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
nbandara.slncu@gmail.com

நிர்வாகம்

திருவதி. நிமல்கா ரோஷினி
இளமாணிப்பட்டம் (ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்)

சேவை உதவி

திருவதி. தில்கு ரிசாந்தி
இளமாணிப் பட்டம்(களனிப் பல்கலைக்கழகம்)