பண்டைய பொலன்னறுவை நகரமானது இலங்கையின் இரண்டாவது வரலாற்றுச் சிறப்புமிக்க தலைநகரமாகும் என்பதுடன், 12 ஆம் நூற்றாண்டில் அரசியல் அதிகாரம், கலாசாரம் மற்றும் புத்தாக்கம் என்பவற்றின் மையமாக செழிப்புற்றது. அனுராதபுரத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் முக்கியத்துவம் பெற்ற இந்நகரம் முதலாம் பராக்கிரமபாகு மன்னனின் கீழ் அதன் உச்சத்தை அடைந்தது. அவர் இதை மிகச்சிறந்த கட்டடக்கலை மற்றும் மேம்பட்ட நீர் முகாமைத்துவ முறைமைகள் என்பவற்றுடன் நன்கு திட்டமிடப்பட்ட தோட்ட நகரமாக மாற்றினார். பொலன்னறுவை அதன் அரச அரண்மனைகள், பெளத்த விகாரைகள்,. தூபிகள், மடங்கள் மற்றும் சோழர் காலத்தின் பிராமணிய நினைவுச்சின்னங்கள் என்பவற்றிற்காக பெயர்பெற்றது. இது பன்முக கலாசார தாக்கங்கள் மற்றும் பண்பட்ட கல் கைவினைத்திறன் என்பவற்றை பிரதிபலிக்கின்றது. கல் விகாரை கற்சிற்பங்கள் கலை மற்றும் மத வெளிப்பாட்டின் தலைசிறந்த எடுத்துக்காட்டுகளாகக் காணப்படுகின்றன. பாரிய நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்கள் உட்பட இதன் விரிவான நீர்ப்பாசன வலையமைப்புகள் அசாதாரண பொறியியல் அறிவையும் நிலைபேறான நகர்ப்புற திட்மிடலையும் நிரூபிக்கின்றன. இவ் எச்சங்கள் ஒன்றாகச் சேர்ந்து, இடைக்கால சிங்கள நாகரிகத்தின் உச்சத்தையும் அதன் நீடித்த கலாசார மற்றும் தொழில்நுட்ப சாதனைகளையும் பிரதிபலிக்கின்றன.