கித்துல் சீவுதல் / கித்துல் வெட்டுதல் என்பது இலங்கையில் கித்துல் அறுவடை செய்வதற்கான ஒரு பண்டைய உள்நாட்டு தொழில்நுட்பமாகும்.
2025 ஆம் ஆண்டில் மனிதகுலத்தின் புலனாகாத கலாசார மரபுரிமை பற்றிய யுனெஸ்கோவின் பிரதிநிதி பட்டியலில் சேர்க்கப்பட்ட கித்துல் சீவுதல் என்பது கித்துல் பனை மரத்திலிருந்து சாறு எடுக்கும் ஒரு பாரம்பரிய இலங்கை நடைமுறையாகும். இந்தச் செயல்முறையானது கவனமாக மரத்தில் ஏறி, பூத் தண்டினை (பாளை) தயார்படுத்தி, தூய வெட்டும் கத்தியைப் பயன்படுத்தி தினமும் சாறு சேகரித்தலை உள்ளடக்கும். பின்னர் சாறு வடிகட்டி, கொதிக்க வைக்கப்பட்டு கித்துல் பானம் தயாரிக்கப்படுகிறது, அல்லது வெல்லம், வினிகர், மதுபானங்களாக பதப்படுத்தப்படுகின்றது அல்லது புதிதாக உட்கொள்ளப்படுகிறது. கித்துல் உற்பத்திகள் விழாக்கள், பண்டிகைகள் மற்றும் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் பாலின அடிப்படையிலான வகிபாகங்களில் வேரூன்றிய இந்த அறிவு முக்கியமாக குடும்பங்களுக்குள் கடத்தப்படுகின்றது. இன்று, இந்த நடைமுறையானது சாதி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு சமூகங்களை ஒன்றிணைக்கின்றது, கலாசார அடையாளத்தை வலுப்படுத்துகின்றது, கிராமப்புற வாழ்வாதாரங்களுக்கு ஆதரவளிக்கின்றது மற்றும் மக்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான மரியாதைக்குரிய உறவை வலுப்படுத்துகின்றது.