SLNCU

இலங்கையின் மாபெரும் வரலாற்று நூலான மகாவம்சம்

இலங்கையின் மாபெரும் வரலாற்று நூலான மகாவம்சம், கி.மு 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 1815 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய உலகின் மிக நீண்ட தொடர்ச்சியான வரலாற்றுப் பதிவுகளில் ஒன்றாகும். தெற்காசியாவில் முதிர்ச்சியடைந்த வரலாற்று பாரம்பரியத்தின் ஆரம்பகால எடுத்துக்காட்டாக இது உள்ளது என்பதுடன், இது இலங்கையின் வரலாற்றை தெளிவான காலவரிசைப்படி வழங்குகிறது. அதன் கணக்குகளின் நம்பகத்தன்மை இலங்கை மற்றும் இந்தியாவின் விரிவான தொல்பொருள் மற்றும் கல்வெட்டு ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது இப்போது பேராதனை பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்படுகிறது. 

தெற்காசியாவின் முதன்மையான வரலாற்று ஆதாரமாக, மகாவம்சம் புத்தரின் வாழ்க்கை, பேரரசர் அசோகரின் ஆட்சி மற்றும் உலகளாவிய மதமாக பௌத்தம் பரவியது பற்றிய முக்கிய தகவல்கள் என்பவற்றை வழங்குகிறது. தென்கிழக்காசியாவில் பௌத்தத்தைப் பரப்புவதில் இது முக்கிய பங்கு வகித்ததுடன் இந்திய வரலாற்றில் பேரரசர் அசோகரின் வரலாற்று அடையாளத்தை கணிசமாக வடிவமைத்தது. மகாவம்சத்தின் விவரிப்புகள் ஆசிய வரலாற்றாசிரியர்கள், ஓவியர்கள் மற்றும் சிற்பிகளின் தலைமுறைகளுக்கு உத்வேகமளித்துள்ளன, இது சிறப்பான மதிப்புள்ள இலக்கிய, கலை மற்றும் சிற்பப் படைப்புகளுக்கு வழிவகுத்தன. 

தென்கிழக்காசிய மற்றும் ஐரோப்பிய மொழிகளில் ஏராளமான மொழிபெயர்ப்புகள் மற்றும் ஒலிபெயர்ப்புகளுடன் பல நாடுகளில் கையெழுத்துப் பிரதிகள் பரவலாக இருப்பதானது,  அதன் சிறந்த வரலாற்று, கலாசார, இலக்கிய, மொழியியல் மற்றும் அறிவார்ந்த முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. இலங்கையர்களைப் பொறுத்தவரை, மகாவம்சம் அவர்களின் தோற்றம், வரலாற்று பரிணாமம் மற்றும் கலாசார அடையாளத்தை அடையாளப்படுத்தும் ஒரு வாழும் ஆவணமாக உள்ளது.