SLNCU

ASP வலையமைப்பு

1953 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட யுனெஸ்கோவின் ஒன்றிணைந்த பாடசாலைகள் வலையமைப்பானது (ASPnet) கல்வி ஊடாக சமாதானம், மனித உரிமைகள், நிலைபேறான அபிவிருத்தி மற்றும் கலாசாரங்களுக்கிடையிலான புரிந்துணர்வு என்பவற்றை மேம்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ள பாடசாலைகளின் உலகளாவிய வலையமைப்பொன்றாக உள்ளது. யுனெஸ்கோவினால் ஒருங்கிணைக்கப்பட்ட ASP வலையமைப்பானது, 167 நாடுகளில் கிட்டத்தட்ட 10,000 பாடசாலைகளை இணைத்து, யுனெஸ்கோவின் கொள்கைகளை அர்த்தமுள்ள கற்றல் அனுபவங்களாக மாற்றுவதன் மூலம் பிள்ளைகள் மற்றும் இளைஞர்களின் மனதில் சமாதானத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுகின்றது.

ASPnet நான்கு முக்கிய குறிக்கோள்களால் வழிநடத்தப்படுகின்றது. முதலாவதாக, இது “உலகளாவிய குடியுரிமை, கலாசாரங்களுக்கு இடையேயான புரிதல் மற்றும் நிலைபேறான தன்மை என்பவற்றை ஊக்குவிக்கும் அதேவேளையில், பாடசாலைகள் சிந்தனைகளின் ஆய்வுகூடங்களாகச் செயற்படவும், கல்வியில் புத்தாக்கம் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தவும் வலுவூட்டுகின்றது”. இரண்டாவதாக, இந்த வலையமைப்பானது பாடசாலைகள் மற்றும் நாடுகளிடையே சர்வதேச ஒத்துழைப்பு, பங்குடைமைகள் மற்றும் அறிவுப் பகிர்வு என்பவற்றை ஊக்குவிப்பதன் மூலம் உலகளாவிய வலையமைப்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துகின்றது”. மூன்றாவதாக, ASP வலையமைப்பானது, புதுமையான கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் பங்கேற்பு, கற்றலுக்கான முழுப் பாடசாலை அணுகுமுறைகள்                             என்ப​வற்றை மேம்படுத்துவதில் கல்வியியலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், ஆற்றலைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றை வலியுறுத்துகின்றது”. இறுதியாக, தொடர்பாடல் மற்றும் பரிந்துபேசுதல் ஆகியவற்றின் மூலம் பாடசாலைகள், சமூகங்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பரந்த அளவில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு மற்றும் ஈடுபாட்டை அதிகரித்து, ASP வலையமைப்பானது, மாற்றமடையும் கல்வி மற்றும் தர மேம்பாடு என்பவற்றை ஊக்குவிக்கின்றது”.

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில், ASP வலையமைப்பானது, மூன்று முக்கிய முன்னுரிமைப் பகுதிகளில் கவனம் செலுத்துகின்றது: அவை நிலைபேறான அபிவிருத்திக்கான கல்வி, உலகளாவிய குடியுரிமைக் கல்வி, மற்றும் கலாசாரங்களுக்கிடையிலான மற்றும் மரபுரிமைகள் பற்றிய கற்கை என்பனவாகும். உறுதியான நடவடிக்கைகள் மற்றும் பாடசாலைகள் சார்ந்த கருத்திட்டங்கள் மூலம், உறுப்பினர் பாடசாலைகள் மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்கான மரியாதை, பாலின சமத்துவம், சமூக முன்னேற்றம், சுதந்திரம்,  நீதி, சனநாயகம், கலாசார பன்முகத்தன்மை மற்றும் சர்வதேச ஒற்றுமை என்பவை உள்ளிட்ட யுனெஸ்கோவின் முக்கிய மதிப்புகளைத் தீவிரமாக ஊக்குவிக்கின்றது.

இலங்கையில், 100 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் ஏற்கனவே ASPnet வலையமைப்பில் இணைந்துள்ளன. இது சமாதானம் மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்கான ஒரு சக்தியாக யுனெஸ்கோவின் கல்வி பற்றிய தூரநோக்கிற்கு வலுவான தேசிய அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது. ASP வலையமைப்பு மூலம் இலங்கைப் பாடசாலைகள் உள்ளூர், தேசிய மற்றும் உலகளாவிய மட்டங்களில் நேர்மறையாக ஈடுபடத் தயாராக இருக்கும் பொறுப்புள்ள, தகவலறிந்த மற்றும் கருணையுள்ள இளம் குடிமக்களை வளர்க்கும் அதேவேளையில் உலகளாவிய உரையாடலுக்கும் பங்களிப்புச் செய்கின்றன.