SLNCU

தேசிய தகவல் நிலையங்கள் (NICs)

தேசிய தகவல் நிலையங்கள் (NICs) என்பது வெளிநாட்டுத் தகைமைகளை அங்கீகரிப்பதை எளிதாக்குவதற்கும் உயர்கல்வி முறைமைகளில் வெளிப்படைத்தன்மை, நியாயத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிப்பதற்கும் யுனெஸ்கோ உறுப்பு நாடுகளால் தாபிக்கப்பட்ட உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்ட அமைப்புகளாகும். நாடுகளிடையே கல்வி இயக்கம் மற்றும் பரஸ்பர நம்பிக்கைப்பொறுப்பு என்பவற்றிற்கு ஆதரவளிப்பதில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

உயர்கல்வி முறைமைகள், நிறுவனங்கள், தகைமைகள் மற்றும் அங்கீகார நடைமுறைகள் பற்றிய தகவல்களுக்கான தேசிய ஆற்றுப்படுத்துகை நிலையங்களாகச் செயற்படுவதன் மூலம், உயர்கல்வியில் தகைமைகளை அங்கீகரிப்பது தொடர்பான ஆசியபசுபிக் பிராந்திய மாநாட்டை (டோக்கியோ மாநாடு) செயற்படுத்துவதற்கு தேசிய தகவல் நிலையங்கள் ஆதரவளிக்கின்றன

பிராந்திய மட்டத்தில், தேசிய தகவல் நிலையங்கள் பிராந்தியத்தில் உள்ள நாடுகளிடையே ஒத்துழைப்பு, தகவல் பகிர்வு மற்றும் ஆற்றலைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றை எளிதாக்குகின்ற  ஆசியபசுபிக் தேசிய தகவல் நிலையங்களின் வலையமைப்பின் பகுதிகளாக உள்ளன. இந்த வலையமைப்பின் மூலம், டோக்கியோ மாநாட்டின் கொள்கைகளுக்கிணங்க, உயர்கல்வியில் அங்கீகார நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் இயக்கத்தை ஊக்குவிப்பதற்கும் தேசிய தகவல் நிலையங்கள் பங்களிப்புச் செய்கின்றன