SLNCU

தொடர்பாடல் மற்றும் தகவல்

யுனெஸ்கோவின் தொடர்பாடல் மற்றும் தகவல் துறையானது, சனநாயக சமூகங்கள் மற்றும் நிலை​பேறான அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் சுதந்திரமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நம்பகமான தகவல் சூழல்களை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது கருத்துச் சுதந்திரம் மற்றும் தகவல்களை அணுகுவதை அடிப்படை மனித உரிமைகளாக ஊக்குவிக்கின்ற அதேநேரத்தில், சுயாதீனமான, பன்முகத்தன்மை கொண்ட மற்றும் தொழில்சார் ஊடக அமைப்புகளின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கின்றது. இத்துறையின் முக்கிய கவனமானது பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு, ஆற்றல் மற்றும் நெறிமுறை தரங்களை மேம்படுத்துவதாகும், இது அவர்கள் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான முறையில் பணியாற்ற உதவுகின்றது.

அதிகரித்து வரும் டிஜிட்டல் உலகில் குடிமக்கள் தகவல்களை விமர்சன ரீதியாக அணுகவும், மதிப்பீடு செய்யவும் மற்றும் பயன்படுத்தவும் அதிகாரம் அளிக்கின்ற வகையில் இத்துறையானது ஊடகம் மற்றும் தகவல் கல்வியறிவை மேம்படுத்துகின்றது. யாரும் பின்தங்கியிருக்கக்கூடாது என்பதை உறுதி செய்கின்ற வகையில் டிஜிட்டல் பிளவுகளை கையாள்வதன் மூலம் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்களுக்கான அனைவரையும் உள்ளடக்கிய அணுகுவழிக்கு இது ஆதரவளிக்கின்றது. மேலும், இத்துறையில் யுனெஸ்கோவின் பணியானது தேசிய மற்றும் உலகளாவிய மட்டத்தில் தகவலறிந்த பங்கேற்பு சமூக உரையாடல் மற்றும் கலாசார புரிதலைப் பேணி வளர்த்து, டிஜிட்டல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பொறுப்பான மற்றும் நெறிமுறைசார் பயன்பாடு மூலம் அறிவுசார்ந்த சமூகங்களின் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்கின்றது.