பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல், வறுமையை எதிர்த்துப் போராடுதல், தரமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கல்விக்கான அணுகுவழியை உறுதிசெய்தல், காலநிலை மாற்றத்தைக் கையாளுதல் மற்றும் அமைதிக் கலாசாரத்தை பேணிவளர்ப்பதற்காக கலாசார பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய சவால்களுக்கு நிலையான தீர்வுகளை வழங்கும் முன்னெடுப்புகளை யுனெஸ்கோ பரிசுகள் அங்கீகரிக்கின்றன. பல்வேறு உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட இந்த பரிசுகள் குறிப்பிடத்தக்க குறியீட்டு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளதோடு, அடிக்கடி பண விருதையும் உள்ளடக்கியுள்ளன.
இந்தப் பரிசுகள் யுனெஸ்கோவின் நான்கு முக்கியப் பணிப் பகுதிகளைப் பிரதிபலிக்கின்றன: அவை கல்வி, அறிவியல் (இயற்கை அறிவியல் மற்றும் சமூக மற்றும் மனித அறிவியல்), கலாசாரம் மற்றும் தொடர்பாடல் மற்றும் தகவல.என்பனவாகும்.
இந்தப் பகுதிகளுக்குள், இந்தப் பரிசுகள் அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் மனித உரிமைகள், எழுத்தறிவு மற்றும் கல்வி, கலாசாரம், சுற்றுச்சூழலின் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்கான அறிவியல் ஆராய்ச்சி போன்ற முக்கிய கருப்பொருள்கள் மீது கவனம் செலுத்துகின்றன.
இலங்கையில் யுனெஸ்கோ பரிசுகள் தொடர்பான ஏதேனும் விசாரணைகளுக்கு, தயவுசெய்து யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவை (SLNCU) தொடர்புகொள்ளவும். பரிசுகள் பற்றிய இற்றைப்படுத்தல்கள் மற்றும் அறிவிப்புகள் யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் (SLNCU) சமூக ஊடக அலைவரிசைகள் மூலம் தொடர்ந்து பகிரப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படுகின்றன.