யுனெஸ்கோவின் பங்கேற்பு நிகழ்ச்சித் திட்டம் (PP) என்பது யுனெஸ்கோவுடன் உத்தியோகபூர்வ பங்குடைமையுடன் உறுப்பு நாடுகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் முன்மொழியப்பட்ட தேசிய, உப பிராந்திய, பிராந்திய மற்றும் பிராந்தியங்களுக்கு இடையிலான நிகழ்ச்சித்திட்டங்களை ஆதரிப்பதன் மூலம்யுனெஸ்கோவின் வழக்கமான நிகழ்ச்சித்திட்டத்தை நிறைவுசெய்யும் ஒரு முக்கியமான பொறிமுறையாகும். இது யுனெஸ்கோ, அதன் உறுப்பு நாடுகள் மற்றும் சிவில் சமூகம் என்பவற்றுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது, அதேநேரத்தில் நாடு மற்றும் பிராந்திய மட்டங்களில் யுனெஸ்கோவின் பணியின் தெரிவுநிலை மற்றும் தாக்கத்தை அதிகரிக்கிறது.
பங்கேற்பு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம், யுனெஸ்கோ உறுப்பு நாடுகளுக்கு கல்வி, அறிவியல், கலாசாரம், தொடர்பாடல் மற்றும் தகவல் ஆகியவற்றில் அதன் பணிப்பாணைக்கு இணங்க முன்னுரிமை முயற்சிகளை செயல்படுத்த உதவுகிறது, குறிப்பாக பாலின சமத்துவம், இளைஞர்கள், நிலைபேறான அபிவிருத்தி மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களின் சேவைகள், பயிற்சி மற்றும் கூட்டுறவுகள், வெளியீடுகள், உபகரணங்கள் மற்றும் மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் ஆற்றலைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கான ஆதரவு ஆகியவற்றை உதவி உள்ளடக்கலாம்.
ஒவ்வொரு இரண்டாண்டுக்கும், உறுப்பு நாடுகள் யுனெஸ்கோவிற்கான தேசிய ஆணைக்குழுக்கள் மூலம் தேசிய முன்னுரிமையின் வரிசையில் தரவரிசைப்படுத்தப்பட்டு, அதிகபட்சமாக ஏழு கருத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்கலாம்.