SLNCU

அரசாங்கங்களுக்கிடையேயான நீரியல் நிகழ்ச்சித்திட்டம் (IHP)

நீர் அறிவியலை மேம்படுத்துவதற்கும் நிலையான நீர் முகாமைத்துவத்தை ஊக்குவிப்பதற்கும் 1975 ஆம் ஆண்டு UNESCO அரசாங்களுக்கிடையேயான நீரியல் நிகழ்ச்சித்திட்டத்தை(IHP) நிறுவியது. ஐ.நா. அரசாங்களுக்கிடையேயான முன்னெடுப்பு, நீரின் மீது மட்டுமே கவனம் செலுத்துகின்றமையினால், அரசாங்கங்களுக்கிடையேயான நீரியல் நிகழ்ச்சித்திட்டமானது சுத்தமான குடிநீர், வெள்ளத் தடுப்பு, பனிப்பாறைப் பாதுகாப்பு மற்றும் நீர் தர மேம்பாடு போன்ற சவால்களை கையாள்கின்றது. இது அறிவை நடைமுறைச் செயலாக மாற்ற முன்னணி விஞ்ஞானிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைக்கிறது. 170 உறுப்பு நாடுகளில் உள்ள நீர் மையங்கள், பல்கலைக்கழகத் தலைவர்கள் மற்றும் தேசிய குழுக்களின் உலகளாவிய வலையமைப்பு மூலம், IHP ஆளுகையை வலுப்படுத்துகின்றது. புதுமைகளை இயக்குகின்றது மற்றும் நீண்டகால நீர் பாதுகாப்பை ஆதரிக்கிறது. UNESCO (வகை 2) இன் அனுசரணையின் கீழ் உள்ள நீர் தொடர்பான மையங்கள் அவற்றின் நிபுணத்துவத் துறைகளில் தொடர்புடைய கருப்பொருள் மற்றும் புவியியல் முன்னுரிமைகளில் செயற்படுகின்றன. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் ஒத்துழைப்புடன் செயற்படும் UNESCO மதன்ஜீத் சிங் தெற்காசிய நீர் முகாமைத்துவ மையம் (UMCSAWM) என்ற நீர் மையத்தை இலங்கை நடத்துகின்றது மற்றும் இதற்கு தெற்காசிய அறக்கட்டளை மூலம் ஆதரவளிக்கப்படுகின்றது.