SLNCU

அரசாங்களுக்கிடையேயான கடல்சார் ஆணைக்குழு(IOC)

யுனெஸ்கோவின் அரசாங்களுக்கிடையேயான கடல்சார் ஆணைக்குழு, சமுத்திர அறிவியல், சமுத்திர கண்காணிப்புகள், சுனாமி எச்சரிக்கை முறைமைகள் மற்றும் கடல்சார் சேவைகள் ஆகியவற்றில் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கின்றது, இது சமுத்திரத்தை நன்கு புரிந்துகொள்ளவும் நிலை​பேறான சமுத்திர முகாமைத்துவத்தை ஆதரிக்கவும் உதவுகின்றது. “கிரகத்தின் 70% பகுதியை உள்ளடக்கி, குறிப்பிடத்தக்க காபனீரொட்சைட்டை உறிஞ்சுவதன் மூலம் பூமியில் உயிர்களை நிலைநிறுத்தும் சமுத்திரம், காலநிலை மாற்றத்தால் அதிகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றது. மேலும், அறிவியல், பாதுகாப்பு, வள முகாமைத்துவம், மரபுரிமைப் பாதுகாப்பு மற்றும் கல்வி என்பவற்றின் மூலம் இந்த சவால்களை கையாள யுனெஸ்கோ செயற்படுகின்றது”. UNESCOO, நிலைபேறான அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் கடல்சார் அறிவியல் தசாப்தத்தை (2021-2030) செயற்படுத்துவதற்கு தலைமை தாங்குகின்றது, இது பல்வேறுபட்ட துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் பங்குதாரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பாகும், இது சமுத்திர அறிவியலில் முன்னேற்றங்களை விரைவுபடுத்தவும் பயன்படுத்தவும் தேவையான அறிவியல் அறிவையும் கூட்டாண்மைகளையும் வளர்த்துக் கொள்ளவும், சமுத்திரத்தைப் பற்றிய சிறந்த புரிதலை அடையவும், 2030 நிகழ்ச்சி நிரலை அடைய அறிவியல் அடிப்படையிலான தீர்வுகளை வழங்கவும் உதவுகின்றது.