மனிதன் மற்றும் உயிர்க்கோள (MAB) நிகழ்ச்சித்திட்டம் என்பது மக்களுக்கும் அவர்களின் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கான அறிவியல் அடிப்படையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கங்களுக்கிடையேயான ஓர் அறிவியல் நிகழ்ச்சித்திட்டமாகும். இது மனித வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கும் இயற்கை மற்றும் முகாமை செய்யப்பட்ட சுற்றுச்சூழல் முறைமைகளைப் பாதுகாப்பதற்கும் இயற்கை மற்றும் சமூக அறிவியலை ஒருங்கிணைக்கின்றது, இவ்வாறு சமூக மற்றும் கலாசார ரீதியாக பொருத்தமான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக நிலைபேறானதுமான பொருளாதார அபிவிருத்திக்கு புதுமையான அணுகுமுறைகளை ஊக்குவிக்கின்றது.
உயிர்க்கோள காப்பகங்கள் ‘நிலைபேறான அபிவிருத்திக்கான கற்றல் இடங்கள்’ ஆகும். அவை சமூக மற்றும் சுற்றுச்சூழல் முறைமைகளுக்கு இடையிலான மாற்றங்கள் மற்றும் தொடர்புகளைப் புரிந்துகொள்வதற்கும் முகாமைத்துவம் செய்வதற்கும் துறைகளுக்கிடையேயான அணுகுமுறைகளைப் பரிசோதிப்பதற்கான தளங்களாகும், இதில் மோதல் தடுப்பு மற்றும் உயிர்ப் பல்வகைமை முகாமைத்துவம் ஆகியவை உள்ளடங்கும். உயிர்க்கோள காப்பகங்கள் நிலம்சார், கடல்சார் மற்றும் கடலோர சுற்றுச்சூழல் முறைமைகளை முறையாக உள்ளடக்கியுள்ளது.
ஒவ்வொரு உயிர்க்கோளக் காப்பகமும் மூன்று வலயங்களைக் கொண்டுள்ளது:
முக்கிய பகுதிகள் (3)
அவை நிலப்பரப்புக்கள், சுற்றுச்சூழல் முறைமைகள், இனங்கள் மற்றும் மரபணு வேறுபாடு என்பவற்றின் பாதுகாப்பிற்கு பங்களிக்கும் கண்டிப்பாக பாதுகாக்கப்பட்ட வலயத்தை உள்ளடக்கியுள்ளது.
இடையக வலயங்கள் (2)
அவை மையப் பகுதியைச் சுற்றி அல்லது அண்மித்து அமைந்துள்ளன, மேலும் அறிவியல் ஆராய்ச்சி, கண்காணிப்பு, பயிற்சி மற்றும் கல்வி என்பவற்றை வலுப்படுத்தக்கூடிய சிறந்த சுற்றுச்சூழல் நடைமுறைகளுடன் இணக்கமான செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
நிலைமாற்றப் பகுதி (1)
நிலைமாற்றப் பகுதி என்பது சமூக-கலாசார மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக நிலைபேறான பொருளாதார மற்றும் மனித நடவடிக்கைகளை சமூகம் வளர்க்கும் இடமாகும்.